இதை விட என்ன அழகு

கார்மேகம் என்ன மேகம்
உன் கூந்தலை விடக்கருமையா?
அந்த வானம் என்ன வானம்
உன் மனதை விட
எல்லையில் நீண்டதா?
மழை என்ன மழை
உன்னருகில் இருப்பதை விட இன்பம் தருவதா ?
நிலவு என்ன நிலவு
உன் பேரழகை விட பிரகாசமா ?
கடல் என்ன கடல்
உன் பற்களை விட
அழகான முத்துக்கள் கொண்டதா ?
அலை என்ன அலை
உன் சிரிப்பை விட
எது என்னை கரைக்கும் ?
காற்று என்ன காற்று
உன் மூச்சே எனக்கு புயல்!
ஒளி என்ன ஒளி
உன் நினைவை விட வேகமா ?
கவிதை என்ன கவிதை
நீ ம்ம்ம் என்று சொல்லினாலும் அதுவே கவிதை !
கடவுள் என்ன கடவுள்
உன்னை பார்க்கிற போது நான் காணும்
சொர்கத்தை விட என்ன சொர்கத்தை காட்டிவிடுவார்!!!

எழுதியவர் : தீனா (12-Oct-14, 4:07 pm)
சேர்த்தது : தீனா கவி
பார்வை : 119

மேலே