தோற்றினும் முயற்சி செய்
மறைந்துள்ள மனித சக்தி
மலராமல் போய்விடும்
மனிதா !
உனக்கு தோல்வி இல்லையென்றால் "
உலகெங்கும் உன்புகழ் உலா வருமா?
நீ தோல்வி கண்டு அஞ்சி நின்றால்
லட்சியக்கனல் பற்றியவுடன்-துன்பங்கள்
லட்சங்கலானாலும் சொர்ப்பங்களாகும்!
இடைவிடா முயற்சி தடையில்லா தைரியம்
இருக்கட்டும் உனக்கு-இதுவே
சரித்திரங்களின் கணக்கு !
உன்னை விமர்சனம் செய்ய
உலகில் உருவான கூட்டம்
உனக்காக ஒரு நாள்
பல கூட்டங்களைக் கூட்டும்!
அழுது புலம்பி ஆனது என்ன ?
கண்ணீரை துடைத்தாய் -கடந்து சென்ற
காலத்தை துடைப்பாயோ?
ஆனது அனைத்தும் ஆண்டவன் பக்கம்-எதிர்வரும் காலம்
ஆளப்போகும் உன் பக்கம் !!!
prathyusha institute of technology and management
aranvoyalkuppam ,
thirruvallur