ஒரே ஒரு சொல்

மற்றவரைத் திட்டும்போதும்.
உற்ற என்னைத் தேடவில்லை.
மற்றவர் உணர்த்தும் போதும்
மனம் தெளியத் தோணவில்லை.

உணர்ச்சியின் மயக்கத்தாலே!
உள்ளறிவை இழந்ததாலே!
மனம் மீறிக் கொட்டிவிட்டேன்
மாறி மனம் அழுதுவிட்டேன்.

விட்டக் கல்லும் திரும்பிடுமா?
சுட்டச்சொல்லும் ஆறிடுமா?
பட்ட மனம் தேறிடுமா?
கெட்ட ஞானம் மாறிடுமா?

ஒரே ஒருச் சொல்லில்த்தானே
உறவைத்தானே முறித்தேனே!
வருடங்கள் வளர்த்த சொந்தம்
ஒரு நொடியில்க் கெடுத்தேனே!

மீண்டும் கூடிப்பழகினாலும்
ஆண்டுப் பல ஓடினாலும்.
தீண்டியச்சொல் மாண்டிடுமா?
வேண்டிய உறவும் மீண்டிடுமா?

சொல்லுக்கென்ன வலிமையென
சோதிக்காமல் வீசினேனே!
வில்லில் விட்ட அம்பெனவே
கொல்லுங்காயம் செய்ததுவோ!

முட்டாள் எனத்திட்டி நானே
முட்டாளாகிப் போனேனே!
மூடன் எனப் பேசி நானே
மூடனாகிப் போனேனே!

நித்தம் நித்தம் பார்க்கும் முகம்
நிதம் பழகிக் களிக்கும் சகம்.
முத்து முத்து உறவு சுகம்.
ஒத்த ஒரு சொல் விலகும்.

நேரே வரும் நேரும் போதும்.
நெஞ்சம் வஞ்சம் அஞ்சும் போதும்
கண்கள் நாணிக் கூசும் போதும்
கால்கள் விலகித்தடம் ஒதுங்கும்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (19-Nov-13, 3:55 am)
Tanglish : ore oru soll
பார்வை : 120

மேலே