சுடலைத்தீ
சுடலைத்தீ
மழலைக் குழந்தை மகிழ்ந்து செய்யும்
குரும்புத்தீ!
வளரும் பிராயம் சேர்ந்தே வரும்
ஆர்வத்தீ!
ஓடி,ஆடி உழைக்கத் தோன்றும்
பசித்தீ!
நம்பிக்கையூட்டி நலம் சேரத்திடும்
நட்புத்தீ!
பார்த்தும்படித்தும்,கேட்டும் இரசித்தும் கசிந்தது
அறிவுத்தீ!
வாலிப பருவம் வசந்தம் தூவும்
காதல் தீ!
இருமனம் இணைந்த திருமண வாழ்வில்
இனபத்தீ!
பொன்னும் மண்ணும் சேரக்கத்துடிக்கும்
பேராசைத்தீ!
வலிமை கொண்டு வாழ்வை உயர்த்தும்
வைராக்கியத்தீ!
உழைப்பில்லா குடும்பக் குன்றிலேரும்
வருமைத்தீ!
அமைதி தவழம் உள்ளத்தில்- அழகு
தவத்தீ!
அன்பு கொண்ட நெஞ்சத்திலே
கருணைத்தீ!
த்த்துவத்தை அள்ளித்தரும்
அனுபவத்தீ!
குழைந்து,குழைந்து உறவைக்கெடுக்கும்
கலகத்தீ!
விட்டுக் கொடுக்க விரைந்தோடும்
கவலைத்தீ!
தனிமையில் தள்ளி தூக்கத்தை குடிக்கும்
வயோதிகத்தீ!
மரணம் குடிக்க மருந்து குடிக்கும்
வியாதித்தீ!
அத்தனைத் தீயையும் அஸ்த்தியாக்கிடும்
சுடலைத்தீ!
-வளர்புரம் யுவராசன்
முகவரி.
2,கிருஷ்ணன் தெரு,139,காமராசர் சாலை,
ஐசுவர்யம் பிளாட் நம்பர்-A1
கொடுங்கையூர்,சென்னை.
கைபேசியில் : 9444030610.