எவர் செய்த குற்றம் இது

கோவில் மாடங்களில்
பூத்திருந்தால் இறைவனின்
பாதகமலங்களில் சேர்ந்திருப்பேன் !!!!

தோட்டத்தில் பூத்திருந்தால்
விலைமிகு வாசனைதிரவ்யமாக
இருந்திருப்பேன் !!!!

வீடுகளில் பூத்திருந்தால்
பெண்ணின் கூந்தலை
அலங்கரித்திருப்பேன் !!!!

ஏன்னோ
சேற்றில் பூத்ததால்
என் வாசனை தான் குன்றிவிட்டதோ !!!!
என் அழகு தான் குறைந்துவிட்டதோ !!!!
எவர் கண்ணிலும் படாமலே போனேன்
பிறர் காலில் மிதிப்பட்டு
வடி வதங்கிப் போனேன் !!!!

எவர் செய்த குற்றம் இது
சேற்றில் பூத்தது என் குற்றமா ????
இல்லை
என்னை படைத்த
இறைவனின் குற்றமா ????

எழுதியவர் : kirubha (20-Nov-13, 12:29 am)
சேர்த்தது : kirubha
பார்வை : 74

மேலே