மதம்

யார் இஸ்லாமியர்கள்..., யார் கிருத்துவர்கள் தெரியுமா... ?
அவர்கள் ஒன்றும் வேறு எங்கோ இருந்து வரவில்லை.. அவரும் நமது பாரதநாட்டில் பிறந்தவர்கள் தான்... நம் தாத்தாவின் காலத்தில் அவர்களுக்கு பிடித்த மதத்தை அவர்கள் தேர்வு செய்து உள்ளார்கள்.. பின்பற்றவும் செய்கிறார்கள்.

உங்களுக்கு பிடித்த சட்டை, புடவை நீங்கள் தேர்வு செய்வதை போல...
அவர்களும். அனைவரும் ஒன்று தான் !.
உங்களின் முதல் கடவுள் தாய், தந்தை தான் என்பது மறுக்க முடியாத உண்மை.


சிலர் மத பிரச்னையை நமக்குள் ஊட்டி, நம்மை பிரிக்க செய்கிறார்கள்..
நம் பிரியாமல் இணைந்திருப்போம் அன்பென்ற பினைப்பொன்றில்....

மதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட மனிதருக்கு கொடுப்போம்..!

மனித நேயம் காப்போம்.....!

முனைவர் நந்தகோபால் இராசா
பட உதவி. மைலாஞ்சி.

எழுதியவர் : அன்புடன் முனைவர் நந்தகோப (20-Nov-13, 12:59 pm)
Tanglish : matham
பார்வை : 357

மேலே