தத்தெடுத்து கொள்ளுங்கள் இந்த நான்கு அறைகாரனை

நான்கு அறைக்குள் ஆரம்பிக்கும் ஒரு போராட்டம் .
காலத்தின் கட்டாய கூற்று இந்த போராட்டம் .கத்தி இல்லை ,தோட்டா இல்லை ,புரட்சி கூட கிளர்ச்சி அடையாத ஒரு ஓட்டம். கொதித்து எழும் ஒரு திரவ படை . சிவப்பு என்னவோ இவன் பரம்பரை அடை மொழி.
சுழன்று கொண்டு தான் இருப்பான் சுறுசுறுப்பாய்,முகம் தெரியா விசை ஒன்று இவனை தொடராதவரை , வேலையில்லாமல் இவன் வெளுத்து போகும் வரை, கந்தசாமியும், வேள்ளம்மாலும் ஆயுள்ளை முடிக்கும் வரை .

கருவில் குழந்தைக்கு மூலமாக இருக்கும் புத்தியே இந்த நான்கு அறைக்குள் தான் முகாமிட்டு இருந்தது.பின்பு வந்த பாகப்பிரிவிணையால் வந்த பிழை தான் புத்தியின் இடமாற்றம் .பிரிந்தாலும் பிரிவதில்லை பரிவு. இருந்தாலும் மின்காந்த சக்தியால் நடக்கும் பரிமாற்றம்.

காற்றடைத்த பை தான் இந்த நான்கு அறைக்கு நண்பன்.தாழ்ந்த, உயர்ந்த பெருஞ்சிரை மூலம் கறை பிடித்து நான்கறைக்குள் வரும் சிவந்தவனை, தன் இரு அறை மூலம் தன் நண்பனிடம் கரை சேர்த்து, கறை அகற்றி தூய்மை நிரப்பி அனுப்பப்படும் சிவந்தவனை மீண்டும் இன்னொரு இரு அறையில் தங்கவைத்து பெருநாடி வழியாக ரகசிய உபதேசத்துடன் பயணிக்க செய்கிறான்.

சிறிய மின் ஆற்றல் இவன் இயக்க சக்தி. மெலிய உறை தான் இவன் உடை. நிமிடத்திற்கு ஐந்து லிட்டர் திரவத்தை வெளியேற்றுபவன்.மெல்லிய உரக்கத்துடன் இயங்குபவன் .நிமிடத்திற்கு 72 தடவை துடிப்பவன் ஏனோ சிலசமயம் உணர்ச்சிவசத்தால் துடிதுடித்து போவான்.இயக்கம் தடைப்படும்போதெல்லாம் அபாய மணி அடிப்பான். கூட்டின் நடுவே வீற்றிருக்கும் இவன் இடது புறம் சாட்சி அளிப்பான்.

எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டி , நினைவுகளுக்கு உயிர் கொடுத்து, காற்றை மேடையாக்கி, காதலில் நனையும் பொது பாதுகாக்க பட்டவன். இருண்ட காட்டில் தொலைந்து சாலையில், வீசும் காற்றெல்லாம் புயலாக பொய்க்கும் பொது நசுக்கபடுகிறான்.

வீரம் விறுவிறுப்பாய், வேங்கை நடை கொண்டு சீறும் பேச்சில் தெறிக்கும் எச்சத்தில் தெரியும் அந்த நான்கு அறை போராட்டத்தின் உச்சம் .

அன்பும், காமமும் ஒரே தேரில் பூட்டினாலும் ,இவன் தேரோட்டி இல்லை.
புத்தனையும் , காந்தியையும் அடையலாம் காட்டிய இவனை யாரும் அடையலாம் கொள்ளவில்லை.
எழுதிக்கொண்டு இருக்கும் நானும் , படித்து கொண்டு இருக்கும் நீங்களும் வாழ்கிறோம் இவன் கொடுத்த நம்பிக்கையில்.

ஓயாது சுழலும் இந்த நான்கு அறைகாரனை , நாம்
ஓய்வு எடுக்கும் முன்பு தத்து எடுத்துகொள்வோம் இன்னொரு குழந்தையாக ....

எழுதியவர் : (20-Nov-13, 4:23 pm)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 134

மேலே