என்னவன்

வெகு நாளொன்றிற்குப் பிறகு
விரும்பியவனினன் வேண்டுகோளுக்கிணங்க..
கவிதை எழுத விழைகின்றேன்..
என்னவனின் நினைவினை
எழுத்தில் எப்படி கொண்டுவருவது.???
விரலிடுக்கில் பேனாவுடனும்.,,,மூடிய
விழியிடுக்கில் அவன் நினைவுடனும்
வெறுமையான காகிதத்தை
வெறித்தபடி பார்த்திருந்தேன்.,,
என்னிடம் வாதம் புரிவதற்காகவே
எல்லா எதிர்ப்புகளையும் மீறி
என் கரம் பிடித்தவன்.,,
எங்களின் விருப்பங்கள்
இன்றளவும் ஓன்றல்ல.,,எனினும்
எதிர்பார்ப்புகள் என்றுமே
இதுவரை இவனிடம் பொய்த்ததல்ல.,,
கொஞ்சல்களுக்கும் விதையாவான்.,,
கோபத்திற்கும் இரையாவான்.,
பாதைகளில் வேறுபட்டாலும்.,என்
பயணத்திற்கு உற்ற துணை இவன்.,
இவனுடன்.,,
விரல் பிடித்து நடப்பதற்கே
பாதைகள் இன்னும் நீள்கின்றன.,
இவனிடம்
ஒவ்வொருமுறை தோற்பதற்கும்.,என்
பிடிவாதங்களும் போரிடுகின்றன.,
மொத்தத்தில்
இவன்
என்னவன்.,,

எழுதியவர் : (20-Nov-13, 11:41 pm)
பார்வை : 94

மேலே