கவிதை டைரி

படைத்த கடவுளுக்கு
பிளையார் சுழி மட்டும் போட்டு,
அம்மாவுக்கு மூன்று கவிதையும் ,
அப்பாவுக்கு ஒரு கவிதையும்,
உடன் பிறந்தோருக்கு ஒரு கவிதையும் ,
ஊர் நலனுக்காய் சில கவிதையும்
எழுதி தள்ளி,
ஏனைய அனைத்து கவிதையும்
என் முகம் பாரா உன்னை பற்றி
காதலை பற்றி எழுதி, கனத்து, களைத்து
என் மேஜை ஓரத்தில்
தன் பேனா காதலியோடு
ஓய்ந்தும் ஓயாமலும் கிடக்கிறது
என் கவிதை ( காதல் ) டைரி .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (21-Nov-13, 7:18 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 120

மேலே