Pirivu
பல முறை
பல விஷயம்
பல மணித்துளிகள்
பலவிதமாக
நம்முடைய
சந்தோஷம், துக்கம்;
மௌனம், கோவம்;
விருப்பு, வெறுப்பு
எல்லாவற்றையும்
பேசி பகிர்ந்திருக்கிறோம்;
இருப்பினும்
பிரிதலின் வலியை மட்டும்
எனக்கே எனக்கு என்று
பகிராமல் வைத்துள்ளேன்;
பிரிந்த பின்னரும்
என்றேனும் எதிர்படுவீர்கள்
என்ற எதிர்பார்ப்பில்
இதழோரம் சேமிக்கிறேன்
என் புன்சிரிப்புகளை;
சிதறப் போகும்
சிரிப்புகளில் சிலதாவது
தூய்மையான நட்பிற்காக
வாழும் உள்ளத்தினை
மகிழிச்சியில் நனைக்கலாம் அல்லவா?
குளிரப் போவது
இதயம் மட்டும் அல்ல
அதில் உறைந்து இருக்கும்
நம் நட்பும் தான்...

