எது

சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!

வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!

ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசைத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?

இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை

கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!

எழுதியவர் : Dheva.S (22-Nov-13, 9:59 pm)
சேர்த்தது : Dheva.S
Tanglish : ethu
பார்வை : 118

மேலே