நல்ல அரசியல்வாதிகள் மன்னிக்கவும்

நல்ல அரசியல்வாதிகள் மன்னிக்கவும்...இது உங்களுக்கானது அல்ல..

கிடைத்ததெல்லாம் எடுத்தான்,
அவன் இங்கிருந்தே எடுத்தான்

கொடுக்கும்மாறி நடித்தான்,
புகைப்படங்களையும் பிடித்தான்

வெள்ளை உடை அணிந்தான்,
கருப்பு பணத்தை மறைத்தான்

ஆற்றில் மணலை அறுத்தான்,
சில மக்கள் மண்ணை பறித்தான்

கடமையை மறந்தான்..
கண்ணியத்தை தொலைத்தான்..


அட போங்கப்பா...
சும்மா அருவி மாதிரி கொட்டுது..
மூணு பக்கத்துக்கு மேல போகுது...
முடியல முடிச்சிக்கிறேன்...

எழுதியவர் : தினேஷ் (கனடா) (25-Nov-13, 5:54 pm)
பார்வை : 113

மேலே