பாக்கியம்

உனது காலை தொட்டு வணங்க
நான் எத்தனை
பாக்கியம் செய்திருக்க வேண்டும் ....

உனது தியாக உள்ளமே
எனக்குள்
உன்னை குடிஇருக்க செய்தது ....

உனது அன்பிற்கு என்றும்
ஈடு இணை இல்லை - அதை
சொல்ல எனக்கு வரிகள் இல்லை ...

வரிகளுக்கு கூட
ஒரு முற்று புள்ளி உண்டு - ஆனால்
உனது பாசத்திற்கு முடிவு இல்லை ......

பணத்திற்காக வேஷமாய்
பாசம் காட்டும் உலகில்,
பரிவோடு என்னை ஆதரிக்கும் ஓருயிர் நீ ....

பரிவு கொண்டு
பாச கரம் நீட்டும் உனக்கு முன்னால்
எதுவும் எனக்கு பெரிதல்ல .....

உன்னை தந்து
என்னை காக்கிறாய்....
உனது பாதுகாப்பிற்கு நிகர் இல்லை .....

ஒரு கோவில் கட்ட சொன்னால்,
கட்டுவேன்
அதை என் அன்பு தாய் உனக்காய் ....
LOVE YOU AMMA .....

எழுதியவர் : Beni (25-Nov-13, 5:59 pm)
Tanglish : paakkiyam
பார்வை : 177

மேலே