dineshdsh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  dineshdsh
இடம்:  கனடா
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2013
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  57

என்னைப் பற்றி...

நான் பகல் கனவு காண்பவன்,
பலிக்காவிட்டாலும் பரவாயில்லை..
என் இரவின் கனவுகள் என்னவென்றே
என் ஞாபகத்திற்கு வராதவரை...

என் படைப்புகள்
dineshdsh செய்திகள்
dineshdsh - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 10:41 am

1985, காலை 5.00 மணி

வானம் விடியலை நோக்கி
வெள்ளை அடித்துக்கொண்டிருக்கும்

மாசில்லா அந்த கொண்டல் காற்று
ஊரெங்கும் வீசிக்கொண்டிருக்கும்

ஊராட்சி துவகப்பள்ளியில் காக்கை
குருவிகளின் முதற்பாடம் துவங்கிவிடும்

நாய் குட்டிகள் தன் தாயை
துரத்தி துரத்தி விளையாடிக் கொண்டிருக்கும்

தெருக் குழாய்களில் தண்ணீருக்காக
குடங்கள், தகர டப்பாக்கள்
வரிசையில் வைக்கப்பட்டிருக்கும்

வீதி முழுக்கும் வாசலில் தண்ணீர் தெளித்து
கோலப்போட்டி நடந்துகொண்டிருக்கும்

மாடு கன்றுகளுடன் மாடசாமி
தன் லுங்கியை தலையில் போர்த்தி
நடந்து செல்வார்

ஐந்து மணி பால் வண்டியின் ஹாரன்
சத்தம் காதுகளை துளைக்கும்

பால்க

மேலும்

dineshdsh - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 10:38 am

அவர் யார்?

நான் நடந்தேன்
அவரும் நடந்தார்..!

நான் நின்றேன்
அவரும் நின்றார்..!

நான் மெல்ல நடந்தேன்
அவரும் மெல்ல நடந்தார்..!

நான் வேகமாய் நடந்தேன்
அவரும் வேகமாய் நடந்தார்..!

நான் கல்லில் இடித்துக்கொண்டேன்
அவர் இடித்துக்கொள்ளவில்லை...!

நான் பார்த்தேன்
அவர் பார்க்கவில்லை..!

அவர் என்பது என் மனமல்ல...!
அவர் என்பது என் நிழலல்ல...!
அவர் என்பது என் உறவுமல்ல...!

அவரிடமிருந்து
இன்று மீண்டும் புதிதாய்
நான் நடைபழகக் கற்றுக்கொண்டேன்..!

அவர்களுடன் பயணம் செய்தவர்களுக்கு
மட்டுமே அவர்கள் யாரென்று தெரியும்..!

யாரென்று தெரிகிறதா..?

-தினேஷ்

மேலும்

இறுதிவரைக்கும் யார் என்று சொல்லவில்லையே! 16-Nov-2014 11:29 am
dineshdsh - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 5:16 pm

கூகிளில் வேலை

இப்போதுதான் புரிந்தது
தேடல்தான் வாழ்க்கையென்று...!

-தினேஷ்

மேலும்

dineshdsh - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 5:14 pm

சுமைகள் எங்களுக்கு புதிதல்ல
அது பழகிப்போனவை,
உன்னையும் உன் பிள்ளையும்
சுமந்தவள் பெண்தான்..!

உன்னை விட வேகமாய்
எங்களால் இயங்க முடியும்,
உனக்கு பின் உறங்கி
முன் எழுபவலும் பெண்தான்..!

காதலில் நீ கவிதை எழுதினால்
எங்களால் கட்டூரையே
எழுத முடியும்,
காதலில் உன்னை விட
தைரியசாலி பெண்தான்..!

இயற்கை கொடுக்கும் எல்லாம்
எல்லோருக்கும் சமம்தான்,
இடையில் நீ ஏன் வந்து
இட ஒதுக்கீடு பேரம் பேசுகிறாய்..!

எங்களுக்கு நடக்க தெரியும்
நீங்கள் எங்கள் கால்களை
இடறிவிடாமல் இருந்தால்
போதும்..!

-தினேஷ்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
Sugi Viththiya

Sugi Viththiya

ஈழம்
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

Sugi Viththiya

Sugi Viththiya

ஈழம்
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Kaleeswaransvks

Kaleeswaransvks

sivakasi
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
மேலே