1985, காலை 500 மணி

1985, காலை 5.00 மணி

வானம் விடியலை நோக்கி
வெள்ளை அடித்துக்கொண்டிருக்கும்

மாசில்லா அந்த கொண்டல் காற்று
ஊரெங்கும் வீசிக்கொண்டிருக்கும்

ஊராட்சி துவகப்பள்ளியில் காக்கை
குருவிகளின் முதற்பாடம் துவங்கிவிடும்

நாய் குட்டிகள் தன் தாயை
துரத்தி துரத்தி விளையாடிக் கொண்டிருக்கும்

தெருக் குழாய்களில் தண்ணீருக்காக
குடங்கள், தகர டப்பாக்கள்
வரிசையில் வைக்கப்பட்டிருக்கும்

வீதி முழுக்கும் வாசலில் தண்ணீர் தெளித்து
கோலப்போட்டி நடந்துகொண்டிருக்கும்

மாடு கன்றுகளுடன் மாடசாமி
தன் லுங்கியை தலையில் போர்த்தி
நடந்து செல்வார்

ஐந்து மணி பால் வண்டியின் ஹாரன்
சத்தம் காதுகளை துளைக்கும்

பால்காரர் தபால்காரர் வீட்டிற்கு
பால் விநியோகம் செய்து கொண்டிருப்பார்

தாத்தா பேரனை தன்னுடன் தேநீர்
கடைக்கு அழைத்துச் செல்வார்

தேநீர் கடையில், காலையில்
அந்த நிலவத்தான் நான் கையில பிடிச்சேன்
பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்

முனிராசு முரசொலி படித்துக்கொண்டிருப்பார்..!

-தினேஷ்

எழுதியவர் : தினேஷ் (16-Nov-14, 10:41 am)
சேர்த்தது : dineshdsh
பார்வை : 61

மேலே