முதிர்கன்னி கலைகிறது

காலம் போகிறது .
கன்னி வயதும் கரைகிறது
சீதனம் என்ற சாத்தான்
கன்னி வயதில் விளையாட
முதிர்கன்னியும் ஆகிறது

தலையிலே ஒன்றிரண்டு
வெள்ளி கோடுகளும் மின்னுகிறது
இன்னும் அவள் காத்திருக்கிறாள்
ஏழு குதிரைகள் பூட்டிய
தங்கத் தேரில் ராஜ குமாரன்
வந்து தன்னை அழைத்துச்
செல்லும் வரை

ஏனோ சீதனம் கேட்கும் ஆண்களும்
அந்த முதுகெலும்பில்லா ஆண்களின்
தாய்களும் தன வீட்டிலும்
ஒரு கன்னிப் பெண் இருப்பதை
மறக்கின்றனர்

தாய் செய்யும் தவறால்
சகோதரன் செய்யும் தவறால்
கன்னி மகள், கன்னி சகோதரி
கன்னி முன் முதிர் பட்டம்
சுமக்கிறாள்

எவ்வளவு காலம் சுமப்பாள்
அவள் வழி தவறிவிட்டாள்
முதிர் கன்னி பட்டம் இல்லை
புதிதாய் விபச்சாரி எனும்
பட்டம் சுமக்கிறாள்

முதிர்கன்னி பட்டமும்
விபச்சாரி பட்டமும் கிடைக்க
அவள் காரணமில்லை
அதோ பாதையில் சீதனம்
எனும் சாத்தானை தலையில்
சுமந்து நடக்கும் முதுகெலும்பில்லா
ஆண்கள் அவர்கள் தான் காரணம்

சத்தியம் செய்வேன்
வீட்டின் மூலையில் முடங்கிக்
கிடக்கும் முதிர்கன்னிகளும்
முதிர்கன்னி உடைத்து
விபச்சாரி ஆகும் பெண்களும்
அவமானம் தாங்காமல்
தற்கொலை செய்யும் யுவதிகளும்
உருவாக அவர்கள் தான் காரணம்

சீதனம் கேட்டு அலையும்
முதுகெலும்பில்லா ஆண்கள் தான்
காரணம்

எழுதியவர் : fasrina (16-Nov-14, 10:51 am)
பார்வை : 84

மேலே