அவர் யார்

அவர் யார்?

நான் நடந்தேன்
அவரும் நடந்தார்..!

நான் நின்றேன்
அவரும் நின்றார்..!

நான் மெல்ல நடந்தேன்
அவரும் மெல்ல நடந்தார்..!

நான் வேகமாய் நடந்தேன்
அவரும் வேகமாய் நடந்தார்..!

நான் கல்லில் இடித்துக்கொண்டேன்
அவர் இடித்துக்கொள்ளவில்லை...!

நான் பார்த்தேன்
அவர் பார்க்கவில்லை..!

அவர் என்பது என் மனமல்ல...!
அவர் என்பது என் நிழலல்ல...!
அவர் என்பது என் உறவுமல்ல...!

அவரிடமிருந்து
இன்று மீண்டும் புதிதாய்
நான் நடைபழகக் கற்றுக்கொண்டேன்..!

அவர்களுடன் பயணம் செய்தவர்களுக்கு
மட்டுமே அவர்கள் யாரென்று தெரியும்..!

யாரென்று தெரிகிறதா..?

-தினேஷ்

எழுதியவர் : தினேஷ் (16-Nov-14, 10:38 am)
Tanglish : avar yaar
பார்வை : 65

மேலே