ஏழையின் முடிவு -கயல்விழி

அடி உதைகள்
அளவில்லா துன்பங்கள்
வசைப்பேச்சுக்கள்
வருத்தெடுக்கின்றான்
தாலிகட்டிய தரம்கெட்டவன்

வாழவந்தாய் என்ன
கொண்டுவந்தாய்
வாங்கி வாடி
இல்லையென்றால் நீ
வாழாவெட்டித்தான்

அத்தை என்னும்
அரக்கியின் அதிகார துன்புறுத்தல்கள் .

பொன்னையும் பொருளையும்
பெண்ணையும் கொடுத்தோம்
கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே
சட்டத்தின் காலில்
விழுந்தனர் பெற்றவர்கள்

ஏழைகளுக்கு நீதி கிடைப்பதென்றால்
இன்னுமோர் ஜென்மம் பிறக்க வேண்டும்

வேலியே பயிரை மேய்ந்தது போல்
சட்டம் மறைத்தது குற்றங்களை
தாசி என்னும் பட்டத்தோடு
தாய் வீடு வந்தாள் பெண்ணவள்

தாங்கிடுமோ ஏழை மனம்
மானம் உள்ள கவரிமான் இனம்
மரணம் ஒன்றே முடிவென்று
மாண்டு மடிந்தனர் மண்ணோடு

மறுநாள் பத்திரிக்கை தலைப்பு செய்தியாக /தரங்கெட்ட மகளின்
செயலால் மனமுடைந்த ஏழை விவசாகி குடும்ப்பத்தோடு தற்கொலை.

எழுதியவர் : கயல்விழி (16-Nov-14, 9:36 am)
பார்வை : 255

மேலே