எரியும்சபதம்

உயிர் கொடுத்து
உழைப்பது உறுதி
உனக்காக மட்டும்தான்
நீ
என்னிடம் வருவாய்
என்ற நம்பிக்கையில்

உன்னோடு
என்காதல்
புனிதமானது
அடைந்தே தீருவேன்
அரைகுறை உயிரில்
கிடந்தேனும்

உன் எதிரி
தோல்வியை அனுப்பி
நீ வென்றுவிட
நினைக்காதே
உன் எதிரியை
நண்பனாக்கி
உன்னை
சுற்றியே வருவேன்
இறுதியில்
பற்றியேதீருவேன்

உன் சுவடுகளில் நின்று
தீயாகி
தீபமாவேன்
ஒளி கொடுக்க
என்
நிழல்வழிதேடும்
உறவுகளுக்காக

எழுதியவர் : வெள்ளையன் (25-Nov-13, 6:01 pm)
பார்வை : 62

மேலே