கோடைகால கிணறு,,,,,,,,,
ஒரு நூறு தாய்க்கு
அந்த ஒற்றைக்கிணறு மட்டும்
ஆழம் நூறடி நாலடியும் நீரில்லை.
குடிப்பதற்கு மாத்திரம்தான்
என்றாலும் நெரிசலில் இரு குடம்
நீர் கூட கிடைப்பதுமில்லை,
வயதான அந்த தாய்களின் முகம் கண்டு கொடுப்பதுவுமில்லை.
அவர்கள் சத்தமிடுவதும்,
சண்டையிடுவதும்
ஆழக்கிணற்றிற்கு கேட்பதுவுமில்லை.
கேட்டிருந்தால் இருந்திருக்கும்
எப்பொழுதும் நிரம்பியபடி.
ராத்தூக்கம் தொலைத்து விட்டு
தண்ணீர் பிச்சைக்காய்
வந்து நிற்கும் இந்த தாய்மார்க்கு
என்ன பதில்................ ??
வயதான ஒரு தாய்,
வயதாகும் ஒரு தாய்,
தாயாகும் ஒரு தாய்,
தாயான இன்னொரு தாய்.
மனசு கண்டு மறுத்திருக்கலாம்
இந்த மங்கையர் கண்டும் மறைந்திருப்பதேன் ....
மலையிடுக்கில் இருக்கும்
கண்களை திறந்து கொண்டால்
எம்மவர் மனசெல்லாம் குளிரும்.
நீர் எப்போது விழிக்கும்
இந்த வறண்ட நிலத்து வஞ்சிகள் கண்ணுறங்க ....