குருவிக்கூட்டுக்குள்ளே குண்டு

குருவிகளே குருவிகளே!எங்கே போறீங்க!—உங்க
கூட்டுக்குயார் குண்டு வச்சான் நீங்க சொல்லுங்க.
பாடிக்கூடி வாழ்ந்த குருவிச்சாதி நீங்கங்க—கூரை
தேடிக்கூடு கட்டிவாழ்ந்த வீடு எங்கெங்க?
ஒற்றுமையா வாழ்ந்தசாதி ஒன்று நீங்கங்க.
பற்றவைத்த பாவி எவன் நாசமாவாங்க!
காதலுக்கு சாதியென்ன நீதியில் லீங்க!--அந்தக்
கடவுளுக்கே பொறுக்காத பாவஞ்செஞ் ஜாங்க
மனசுகூடும் காதலையும் பிரிச்சுவக் காங்க
இனந்திரிஞ்சு எரிமலைக வெடிக்க வக்காங்க.
மனசுக்குத்தான் குண்டுவச்சு மடிஞ்சுபோ னாங்க—உங்க
இனத்தக்கூட விட்டுவக்க இரக்கமில் லீங்க.
மருந்துக்குனு புடிச்சுப் புடிச்சு இனமழிக்காங்க.
பறந்துநீங்க இனம்தழைய மறைஞ்சி வாழுங்க.
அருமறியா மனுஷனுக்கு அறிவு இல்லீங்க—குருவி
அவசியமும் அவனறிஞ்சு புரிஞ்சுக்கொள் வாங்க/
புழுவினங்கள் பெருகிப்பயிர் அழிக்கும்பா ருங்க
அழுதுமனுசன் அப்பத்தான அறிஞ்சுபாப் பாங்க.
உமக்காகக் கூரைவீடு கட்டிவப் பாங்க—தேடி
உமைக்கூட்டி வந்துமே வாழவப் பாங்க.
இனம்பகைக்கும் மனிதகுலம் திருந்தி வாழுங்க.
இளையதல முறையேனும் பொருந்தி வாழுங்க.
கொ.பெ.பி.அய்யா.