ஆசை அடங்கிவிடுமா
என்
வீட்டில்
ஆயிரம் மூட்டை
அரிசி இருந்தும்...
ஏன்?
இந்த எறும்புகள்
ஒரு
அரிசியை மட்டும்
தூக்கிக்கொண்டு ஓடுகிறது...
அதற்கு அவ்வளவு
வலிமை இல்லை என்று
எடுத்துக்கொள்ள வேண்டாம் ....
அதற்கு கூட
அதன் தேவை
புரிந்து இருக்கிறது...
ஆனால் ,
ஓரறிவு படைத்த
எறும்பு
உணர்த்தும் கருத்தை..!
ஆரறிவு
படைத்த
மனிதனால்
உணர்ந்து கொள்ளமுடியவில்லையே..