இயற்கையின் ஈர்ப்பு விசை
சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும்
வானவில்
சில மணிகள் மட்டுமே சிரித்திருக்கும்
பூக்கள்
சில நாட்கள் மட்டுமே வாழும்
பட்டாம்பூச்சி
பல வருடங்கள் வாழ்ந்தும்
நான் பெறாத
ஆர்பாட்டமான வரவேற்பை
அன்பான முத்தத்தை
கதகதப்பான அரவணைப்பை
குழந்தைகளிடம் இருந்து
எழிதில் பெற்றுவிடுகின்றன !!