மனிதம்
மதம் ஒரு வழிகாட்டி, ஆன்மிகம் ஒரு திறவுகோல். எங்கு மதம் முடிவு பெறுகிறதோ அங்கு ஆன்மிகம் தொடங்குகிறது.
ஒரு காட்டில் இருவர் பாதையை தொலைத்துவிட்டு திணறுகின்றனர். அப்பொழுது சரியான இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்கிறது. வாழ்கையில் அதீத நம்பிக்கை உடையவன் ஒவ்வொரு மின்னலிலும் பாதையை பார்த்துக்கொண்டே தன் பயணத்தை தொடர்கிறான்.
எல்லாவற்றிற்கும் இறைவனையே நம்பும் மற்றவன், முதல் மின்னலை அண்ணாந்து பார்த்துவிட்டு தன் பார்வையை இழந்து அங்கேயே வீழ்ந்து விடுகிறான்."
தன் திறமையை நம்புகிறவன் மனிதன், மதத்தை மட்டுமே நம்புவது சரியில்லை. மதம் ஒரு வழிகாட்டி, ஆன்மிகம் ஒரு திறவுகோல்.
இதற்கப்பால் இருப்பது தான் மனிதம். தன் துயர் பாராது, கண்ணிழந்தவனை சுமந்து சென்று அரசு ஆசுபத்திரியில் சேர்ப்பது. தன் திறமையை நம்பும் மனிதனிடம் இறைவன் எதிர்பார்ப்பது இந்த மனிதம் தான். இதை பலரும் செய்வதில்லை என்பது தான் உண்மை.