உயிரானவளே உயிரெழுத்துகளால் உனக்காய் ஒரு கவிதை
அன்பின் அர்தத்தை அன்பால் உணத்தியவளே...!
ஆயுள் முழுவதும் வேண்டுமடி உனதன்பு
இதழோரம் புன்னகைபுரிந்து
ஈர்தாயடி உன் விழியால்
உன் உதட்டோரம் மச்சம் கண்டு
ஊடல் கொண்டது என் உள்ளம்
எங்கும் உன் முகமே
ஏங்கி தவிக்கிறேனடி
ஐம்புலனும் ஐக்கியமானதோ உன்னுள்
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் ஜென்மங்கல்
ஒளவை மொழிகொண்டு
ஆயுள் முழுவதும்
அன்பில் அன்பை வாழ ஆசையடி..!!!