மாவீரர்களே

ஓ ....மாவீரர்களே ...
நீங்கள் மரணித்து விட்டீர்களாமே ?
யார் சொன்னது ?
கருவறையில் கூட கல்லறை இருப்பது
இவர்களுக்கு தெரியாதா ?
கண் இருந்தும் குருடர்களாகவும்
காது இருந்தும் செவிடர்களாகவும்
வாய் இருந்தும் ஊமையாக
இருப்பவர்களுக்கு வேண்டுமானால்
நீங்கள் மரணித்து இருக்காலம்
எம் கார்த்திகை தீபங்களே
காவிய நாயகர்களே
நாம் இங்கு வலி சுமந்த
உங்கள் நினைவுடன்
உம்மை மறந்து நாம்
சந்தோசமாக இருக்கவில்லை
வலி சுமக்கும் எங்கள் மனதை
நீங்கள் உணர்வீர்கள்
நெஞ்சினில் உறுதியாக
ஈழத்தின் விடிவுக்காக
குழந்தைகளை அணைக்கும்
மென் கைகளில்
கருங்குழல் துப்பாக்கிகளையும்
பொன் கழுத்தில்
நஞ்சு மாலையையும்
மார்பில் ரவைப் பொதிகளையும்
தோளில் குண்டுக் கவசங்களையும் சுமந்து
மரணத்தை துச்சமாக மதித்து
விடியலுக்காய் விடி வெள்ளியாய்
வானில் ஒளியாய் சென்றீர்களே
கார்த்திகை பூக்களே தீப ஒளியேற்றி
உங்களை தொழுகின்றேன்
உங்கள் கல்லறையை
தொட முடியவில்லை
என் இதயக் கல்லறையில்
வீற்று இருக்கும் உங்களை
தொட்டு வணக்குகிறோம்
கை கொடு தமிழா கை கொடு
உலகத் தமிழா கை கொடு
சூரியனை தொடாத காற்றும்
எம்மை தாங்கும் பூமியும்
ஒருநாள் தென்றல் ஆகும்
ஈழம் விடிவே நம் விடிவு
எங்கள் மாவீரர் செல்வங்களுக்கு
எனது வீரவணக்கங்கள் ...