என் உயிர் காதலா என் பேனா

அற்புதமான காதலா
என் உயிர் காதலா
நான் கிறுக்க கிறுக்க
என்னோடு வருகிறாய்
கூட பிறக்கவும் இல்லை
என் சொந்தமும் இல்லை
விளம்பர பேனாவோ இல்லை
எந்தன் உயிர் பேனா
நீ மின் சக்தியோ
என் உணர்வுகளை நிறுவுகிறாய்
என் உயிரே பதற்றம் இன்றி
எரிவாயு நிலையம் வங்கி
எல்லா இடங்களிலும்
என் கூடவே வருகிறாய் .

எனது சிறிய அலுவலகத்தில்
தினமும் இருந்தே
என்னை பார்த்து புன்னகைகிறாய்
தினமும் நீரூற்று
உந்தன் உழைப்பின் வியர்வையோ
பெரிய மர்மமே
நான் எழுதும் கிறுக்குகளுக்கு
உடந்தையாய் இருந்தே
கிறுக்கு நீயும் கிறுக்கு என்றே
துணையாக இருக்கிறாய்

நான் கிறுக்குவது என் காதலனுக்கு
பிடிக்கவில்லை ஏனோ
உனக்கு எவ்வளவு பெரும் மனசு
என்னை ஆதரிக்கிறாய்
அன்பாக கைக்குள் இருந்து
கிறுக்கு கிறுக்கு என்றே
செல்லமாய் தட்டிக் கொடுக்கிறாய் ..
என் வளர்ச்சிக்கு தினம்
உயிர் கொடுக்கிறாய்
நீயோ சுயநலம் அற்ற என்னை
காக்கும் என் உயிர் காதலன்

எனக்கு கோபம் வரும் போதெல்லாம்
உனக்கு அடிக்கிறேன் குத்துகிறேன் தூக்கி வீசுகிறேன் என் உயிரே.சுயநலக்காரி நானே
மறுபடி உன்னை அணைக்க உன்னருகில் நெருங்கிவரும்போதே ஏக்கத்துடன் பார்க்கிறாய் கோபம் இன்றி என்னுடன் வருகிறாய்
கையில் வந்தவுடன் சிறு முத்தமோ
கோபம் இன்றிப் பதிக்கிறாய்

உன்னை காதலித்த பின்பே
நானோ கிறுக்க ஆரம்பித்தேன்
இன்றோ என்னையே மறந்து
கிறுக்கியாய் கிறுக்கிறேன்
என் கற்பனைகளை நானோ
எழுத்துக்களாக கிறுக்கவே
உந்தன் உதிரம் கொண்டே
அழாமல் நீயும் வலிக்க வலிக்க
என் கிறுக்குகளுக்கே உயிர் கொடுகிறாய்
என் காதலா என் சொல் கேட்டே
கைக்குள் அடங்கி நீயும் பணிகிறாய்

அடக்கமான காதலனோ
எந்தன் கிறுக்குகளுக்கே காவலாக
நான் உறங்கினாலும்
நீ உறங்குவதில்லை
என் உயிரே காதலா
என் அருகில் இருந்து நீயும்
நான் உறங்குவதை ரசிக்கிறாய்
எங்கு சென்றாலும் என்னோடு
இணை பிரியாமல் வருகிறாய்
எந்தன் காதல் கிறுக்குகளை
கிறுக்குகையில் அழகாய் வளைந்து
வளைந்து கிறுக்க என் துணையாக
என்னோடு வருகிறாய்

கிறுக்குகளை அழகாக்கி
என் ஜந்து கை விரல்களுக்குள்
அமர்ந்து சொல்லில் விளையாடி
கிறுக்கியே வடிக்கிறாய் .
கிறுக்கி கைகளில் சிக்கியே,
சிக்காமல்நீயும் கிறுக்குகிறாய்
உன்னை தினமும் தொட்டு பார்க்கிறேன்
தொட்டு பார்ப்பதை
நீ அறிய வில்லையோ.
கைகளுக்குள் இருந்து முத்தமிட்டே
உன் ஆயுளைகளை கழிக்கிறாய்.
கைகளில் அமர்ந்து என்னை காதலிக்கிறாய்
நீயோ நேசிப்பது சொல்லாமல் என்னையே

இரவில் தூக்கம் இல்லாத பொழுதுகளில்
என் எண்ணங்களை நண்பர்களோடு
பேசமால் விடாமல் தடுக்கிறாய்
ஏனோ காதலா எந்தன் தனிமை
முழுக்க காதலன் உன்னுடனே கழிக்கிறேன்
காதலா என் வசியக்கார நீயோ என்னையே வசியப்படுத்தியே என்னவனை மறந்து
உன்னை தினமும் அணைக்கிறேன்

தனிமையில் காதல் கொண்டே
என்னவனை மறக்கிறேன்
சில கிறுக்கல்கள் இதயத்தில்
காகித வடிவ வலி வடிவில்
நீ அருகில் இருக்கவே
என்னவன் நினைவோ இல்லை
உன்னால் பல கிறுக்கல்கள்
கிறுக்கியே நான் கிறுக்கியானேன்
இன்றும் ஓயாது உந்தன் நினைவில் கிறுக்கியாகினேன்

பல கிறுக்கல் பொய்யில்
சில சில கிறுக்கல்கள் கிறுக்கி
நான் உன்னையே தினமும் நேசிக்கிறேன்
என் உயிர் காதலா
உந்தன் துணையுடன் நானோ
கவிதாயினி ஆகும் வரை
தொடருமோ என் கிறுக்கு பயணம்
இல்லை உயிர் விடுவேனோ

எழுதியவர் : (29-Nov-13, 12:31 am)
பார்வை : 109

மேலே