செம்மொழி வாழ்த்து

செம்மொழி வாழ்த்து

முதலொலியாம் முத்தாம்; வளர்மொழியாம்; வாய்த்தயிரு,
கண்ணாம், கருவிழியாம்,காலமாம்! -கன்னல்
இனிமை, வளமை, இளமை, வழமை
தனித்தசிறப் புள்ள தமிழ்

பிறக்கும் பொழுதே பிறக்கும் ஒலியில்
பிறக்கும் உறவும்அம் மாவாம்! - சிறப்பிதுபோல்
உண்டோ பிறமொழி ஒன்றிலுமே சொல்லுக!
கொண்டதும் செம்மொழி தமிழ்.

அறம்பொரு ளின்பம் அதன்பின் பெறும்பேறும்
அன்ன பெருமை அனைத்தும்—திறமாய்
அமைந்தும் வளமாய் நிலமதில் வாழும்
அருமைத் தமிழே சிறப்பு

பன்மொழி ஏற்றுப் பதித்த இலக்கியங்கள்
வண்பொலி வேற்றி வளர்ந்துமே—தன்னிலைத்
திண்ணமும் தேறியும் முன்னிலைப் போற்றியும்
வண்தமிழ் வாழும் வழுத்து!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (29-Nov-13, 2:14 pm)
பார்வை : 566

மேலே