கானல் நீர்

கானல் நீர் போன்று ஆனது வாழ்வு
கனல் தெறி த்தது கடு வாயிலே
அனல் பற ந்த்தது வாழ்விலே
அடித்துக் கிளப்பியது காற்றிலே

துவண்டு போனாள் அவள்
வெடித்துச் சிதறினாள் துண்டு துண்டாக
விம்மி கதறினாள் விக்கி விக்கி
எல்லாம் போய் விட்ட பின் அழுது என்ன பயன்.?

கோபம் தலை உச்சிக்கு ஏறிய போது
தன்னை மறந்து தன நிலை உணராது
பேசின பேச்சுக்கு வந்த வினை
இன்று வாழ்வு இழந்த நிலை

நிதானம் நியாயம் பார்த்து நிற்காமல்
தன் பிடிவாதத்தால் கொம்பாகிப் போனாள்
வெற்றுக் கொடி கூட அவள் மீது படராமல்
பட்ட மரமாகிப் போனாள் நிஜந்தா .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-Nov-13, 7:19 pm)
Tanglish : kaanal neer
பார்வை : 201

மேலே