காற்றில் கரைய

ஆழ்ந்த பெரிய குளம்
சாலையைத் தொட்டிருந்த
கரைச் சுற்றி
காகிதப் பூக்கள்...

நீரின் மெல்லிய அலைக்கு
அசைவைக் காட்டி
புதிதாய் மொட்டவிழ்ந்த
அல்லி...

செம்போத்து பறவைகளும்
கருஞ்சிட்டுகளுமாக
அருகில் சலசலப்பாய்
புதர்கள்...

மூழ்குவதும் எழுவதுமாக
முக்குளிப்பான்கள்...
கரை தொட்டே நடக்கும்
உன்னி கொக்குகள்...

சிறு சலனங்கள் சுமந்து
மற்றபடி அமைதியாய்
குளம்...

கரை அமர்ந்து
காத்திருந்தேன்
என் கண்களின் நீர்
காற்றில் கரைய....

எழுதியவர் : அகிலா (29-Nov-13, 8:53 pm)
Tanglish : kaatril karaiya
பார்வை : 660

மேலே