அருங்காசியகத்திலாவது இருக்குமா....?


தமிழர் பண்பாடு எங்கே...?

காலை கதிரவனின் ஒளியை...

ஒய்யாரமாய் கிழித்து செல்லும்....

சிட்டு குருவி....

ஒட்டறை நெல்லுக்கு ஓராயிரம் முறை

சீட்டேடுக்கும்

ஜோசிய கிளி....

எதை கேட்டாலும் ஆம்... என

தலை ஆட்டும்

பூம்பூம் மாடு...

நாடு இரவிலே, குளிரிலே, குறி சொல்லும்

குடுகுடுப்பகாரன்...

தாலாட்டுடன் சுகமாய் தூங்க வைக்கும்

பாட்டியின் கதைகள்...

ஈ, எறும்புக்கு இரையாகட்டுமென என

வாசலிலே மா கோலம்....

இவை அனைத்தும் இனி

அருங்காசியகத்தில்தான் தேட வேண்டுமோ

மன்னிக்கவும்

தூய தமிழ் பேசும் தமிழனை சேர்க்க

மறந்துவிட்டேன்......

எழுதியவர் : இன்பா (26-Jan-11, 4:23 am)
பார்வை : 466

மேலே