உன்னில் பாதி நீ வேட்டைக் காடா

உன்னில் பாதி நீ வேட்டைக் காடா??
==================================

உன்னில் பாதி
நீ வேட்டைக் காடா??
கேள்வி எழ வைத்தாய் - பெண்ணே
ஏன் கேலி பேச வைத்தாய்???

ஆடவன் பார்வை ஈர்க்கும்
ஆடைதான் காரணமோ??
வேட்டைக்கா டாக்கிவிடும்
அரை நிர்வாணக் கோலம்தானோ??

பாதி நீ காரணமானாய்
மீதி காமுகனானான்
வேட்டையாடிக் களிக்க - பெண்ணே
வழி காட்டியும் நீயென்றானாய்!!!

பாலியல் கொடுமையெல்லாம்
பெண்ணுடுத்தும் ஆடையில்தானா??
பெரியோரே... ஆன்றோரே....
பகன்றிடுவீர் நெஞ்சம் தொட்டு!!!!

ஆடை காரணமென்றால்
துள்ளியாடிடும் மழலையுமே
எவ்வாடை உடுத்தி வர - காமுகன்
வேட்டையாடிப் போனான்??

பச்சிளம் குழந்தையிடத்து
காமுகனின் இன்பமென்ன??
துகிலுரித்த காமுகன் உடலின்
தோலுரித்து உப்பிட்டால்தான் என்ன??

பணிக்குச் செல்லும் பெண்கள்
தனிமையில் கன்னிப் பெண்கள்
பள்ளியிலே பயிலும் சிறுமி -
கற்பழிப்போ வகை வகையாய்....

பள்ளியிலே கல்லூரியிலே
பணியாற்றும் அலுவலகத்திலே
காவல் நிலையம், பேரூந்தென்று
எல்லை விரியும் கற்பழிப்பு இடங்கள்!!!

இருக்கிறதா நாட்டில் இதற்கு
தண்டனை கடுமையாக அவர்க்கு
இல்லை அதனால்தானோ - இன்னும்
கணக்கினிலே அதிக கற்பழிப்பு??

நீதியின் முன் நிறுத்தினாலும் - அவனை
சட்டத்தின் ஓட்டை காக்கும்
நீதியினை கையில் எடுப்போம்
நீசனுக்கே தண்டனை கொடுப்போம்!!!

நிற்க வைத்து சுட்டால் அவனும்
நிமிடத்தில் செத்தொழிவான்
வலி தெரியாமல் அவனின்
வாழ்நாளும் முடிந்திடலாமா??

சாகும்வரை ஓட விரட்டி
சாட்டையிலே கா முகனை அடித்து
சதைகள் பிய்ந்து குருதியில் நனைத்து
குலைத்திடுவோம் உருத்தெரியாமல்!!!

பெண்களின் கைகளில் இனியே
சாட்டைதனை கொடுத்தே வைப்போம்
பேராபத்து வேளைதனிலே
பிய்க்கட்டும் காமுகன் சதைகள்

ஓடட்டும் வெறியர் இனமும்
ஓயட்டும் வெறித்தனமெல்லாம்.
சாயட்டும் காமுகன் மண்ணில்
பயமின்றி வாழட்டும் பெண்கள் உலகில்!!!

தனி மனித ஒழுக்கத்தோடு
வாழ்ந்திடுங்கள் ஆணும் பெண்ணும்
சீர்கெடும் நிலை தானே ஒழியும்
சிறந்து விளங்கும் மனிதர் வாழ்வும்!!!

எழுதியவர் : சொ. சாந்தி (1-Dec-13, 8:38 am)
பார்வை : 1509

மேலே