+தூண்டப்பட்டால்+

திரி தூண்டப்பட்டால்
ஒளி வந்து சேரும்
நீர் தூண்டப்பட்டால்
அலை வந்து சேரும்

வீணை தூண்டப்பட்டால்
இசை வந்து சேரும்
இதயம் தூண்டப்பட்டால்
காதல் வந்து சேரும்

மேகம் தூண்டப்பட்டால்
மழை வந்து சேரும்
சோகம் தூண்டப்பட்டால்
கண்ணீர் வந்து சேரும்

உள்ளம் தூண்டப்பட்டால்
மகிழ்ச்சி வந்து சேரும்
நிலம் தூண்டப்பட்டால்
விளைச்சல் வந்து சேரும்

சாதி தூண்டப்பட்டால்
சண்டை வந்து சேரும்
நீதி தூண்டப்பட்டால்
புரட்சி வந்து சேரும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Dec-13, 6:31 am)
பார்வை : 86

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே