நான் பெண்ணாக பிறக்க ஆசையடி
உனக்குள் தானே இருந்தேனடி
உன்னால் தானே பிறந்தேனடி
கோவிலையும் தெய்வத்தையும்
தாயின் உருவில் கண்டேனடி
சொல்ல வார்த்தைகள் இல்லை
கண்ணீரும் இல்லை
நீ என்னை விட்டு பிரிந்த நொடி
இந்த மண்ணில் எனக்கு யாருமில்லை
உன்போல் அன்பு கொடுத்ததில்லை
மண்ணுக்கும் அது தெரியுமடி
உன்னை புதைக்கும் போது அது அறியுமடி
விதையாய் நீயோ மாறி வந்து
செடியாய் நீயோ வெளியில் வந்து
மரமாய் உன் உருவில் நிலைத்து நின்று
நிழலாய் என்றும் என்னை காத்து நிற்பாய்...
-தினேஷ்
மரங்களை வெட்டும் மனிதர்களுக்கு
அவள் தாய்தான் என்று புரியட்டும்
இந்த கவிதையின் வடிவாய் தெரியட்டும்
தாய் அன்பின் ஆழம் அறியட்டும்...
இந்த மண்ணில் மறுஜென்மம் உன்டென்றால்,
நான் பெண்ணாக பிறக்க ஆசையடி
உன்னை மகனாக பெற்க வேண்டுமடி...