வந்துவிட்டது புதுவிடியல்

வந்துவிட்டது விடியல்
தாயின் கருவறையே
கல்லறையான பெண்சிசுவிர்க்கு.

வந்துவிட்டது விடியல்
பள்ளி செல்லும் வயதில்
மணவறை சென்ற பெண்பிள்ளைக்கு.

வந்துவிட்டது விடியல்
நாட்டை ஆளும் ஆளுமைக்கொண்டு
அடுப்பினை மட்டும் ஆண்டுவந்த பெண்ணிருக்கு
.
தைரியத்தை மூச்சாக்கி,
நம்பிக்கையை நாடித்துடிப்பாக்கி,
அறிவை ஆயுதமாய்க் கொண்டு
தலையில் கொட்டும் சில
ஆடவரின் ஆணவம் தகர்த்து,
நாட்டையே ஆளும் பெண்ணாக,
உலகையே வழிநடத்தும் பெண்ணாக,
பெண்ணிற்கு வந்துவிட்டது புதுவிடியல்

எழுதியவர் : bhuvanamutukrishnan (3-Dec-13, 12:10 pm)
பார்வை : 931

மேலே