எது பெருமை

ஆராரோ என்று மகனை பாடினாள் அன்று
அவள் யாரோ என்று மகன் கூறுகிறான்
இன்று!


நீ தூங்கு என்று விடியும் வரை
விழித்திருந்தாள் அன்று...
நீ செத்து மடி என்று புறம் தள்ளுகிறான்
இன்று!

பூவே என்று தாய் அழைத்தாள் அன்று...
போடி என்று விரட்டியடிக்கிறான் இன்று!
மனைவியின் சொல்லில் கல்லாய்ப் போன
மனிதா.......

அந்த தாய் மனம் மகிழ்ந்திட செய்வாயா?

"தாய் என்ற பெருமையை விட
வேறென்ன பெருமை வேண்டும் "அவளுக்கு"?

"நல்ல மகன் என்ற பெருமையை விட
வேறென்ன பெருமை வேண்டும் "உனக்கு"..............

எழுதியவர் : ப்ரியா (3-Dec-13, 12:18 pm)
Tanglish : ethu perumai
பார்வை : 138

மேலே