என் பேனா
எழுதி எழுதி
தாகம் ஏற்பட்டபோது...
தேடினேன்...
தண்ணீர்க் குவளையை...
திடீரென கண்ணீராய்
வடித்துக்கொண்டிருந்தது...
எனது வரிகளைப்படித்து,,,
என் எழுத்து நண்பர்களைப்போலவோ...
வலியும் வேதனையும்
அறிந்ததாலையே...
வரிகளையா...இந்த வறியனின்
வர்ணனையா?