இன்றைய கல்வி மோகம்

கல்வி கல்வி கூவி விற்கும்
கடைபொருளாய் வீதியெங்கும்
விமோசனம் வேண்டி

ஆடிப்பாடி கற்ற கல்வி
ஆங்கில மோகத்தில் அத்துமீறி
அபாயகரமாய் அங்கிங்கெனாதபடி

தாய்மொழியில் பேசினால்
அறிவிங்கே அகன்றிடுமாம்
அடிமை மொழியில் புதுமைகளாம்

புரியாத மொழிதனை புகுத்தி
புரிந்துணர்வை போலியாக்கி
போலிக்கு வேலியிட்டு தண்டனையாம்

எழுத்தொன்று படிக்க
பொதியொன்று சுமந்து
கூனாகி போனது அறுத்தெறிந்த இதயமொழி

அன்பென்ற தாய்விடுத்து
அழகென்ற தாய்தேடி
அலையும் அபாயம்

புத்தி சொல்வாருமில்லை
புரிந்து செல்வாருமில்லை

எழுதியவர் : bhanukl (3-Dec-13, 10:48 pm)
பார்வை : 393

மேலே