முடியுமென்றே முடிவெடு

முல்லை பூ வாசனையாய்
முயலென ஓடும் சுறுசுறுப்பாய்
மூவுலகும் போற்றும் ஆர்வலனாய்
மூப்பில்லா வாழ்வோடு
மூத்தோர் சொல்லின் கருத்தோடு
முன்னேறத் துடிக்கும் நண்பர்களே
மூலையில் விழுந்து
முடங்கிட வேண்டாம்
முக்காடிட்டு அழுதிட வேண்டாம்
முயன்றால் வெற்றி நமதாகும்
முடியாதென்றால் மூழ்கிடுவோம்
மூச்சுள்ளவரை போராடு
மூர்க்கதனத்தால் எதுவும் முடியாது
மூளை பலத்தால் முடித்திடுவோம்
முடிவெடு நண்பா ..............முடிவெடு
முடியும் என்றே முடிவெடு
மூடிய இமைகள் திறந்திடுவோம்
முழு வெற்றிக்காக உழைத்திடுவோம் .

எழுதியவர் : கொங்கு தும்பி (3-Dec-13, 11:19 pm)
பார்வை : 478

மேலே