தனிமை
ஒற்றை நிலவை ரசிக்கத் தோன்றவில்லை...
மனம் ஜோடிப் புறாவின் மீது பார்வை வீசியது...
ஆகாயத்தை ஆளும் ஆதவனை விட..
விண்மீன் கூட்டம் என்னைக் கவர்கிறது..
வீட்டோரம் நிற்கும் ஒற்றை ரோஜாவை மறந்து..
காட்டுப் பூக்களை கண்கள் தேடுகிறது ..
தனிமை தந்த பாதிப்பின் ஆழத்தை உணர்கிறேன்...