நான் இல்லை

கண்ணிலாத இருவர்
பார்த்துக் கொண்டிருந்த
டீவியை அணைத்தேன்.

பேச முடியாத இருவர்
கை ஜாடையில் பேசிய
ரகசியத்தை ரசித்தேன்.

காது கேட்காதவர்கள் பலர்
பாடிய பாடல்களை விமர்சித்தேன்.

கையில்லாதவர்கள் செதுக்க
இருந்த சிலையின் வடிவை
சீரழித்தேன்.

கால் இல்லாதவர்கள் மைதானத்தில்
உதைக்க இருந்த பந்தை வலைக்குள்
உதைத்தேன்.

ஊனமுற்றவர்களிடம் போராடி
வெறுமையில் முழுமையான
உடல் இருப்பவனை தேடும்பொழுது
தான் தெரிந்தது எனக்கு
உடலே இல்லை என...

எழுதியவர் : லெத்தீப் (3-Dec-13, 10:57 pm)
Tanglish : naan illai
பார்வை : 90

மேலே