உடன் வரும் துரோகம்

அன்பு ஒழுக பேசிடுவார்
அழகுடன் நடித்திடுவர்
பாசவலை வீசிடுவார்
பாசாங்கு செய்திடுவார்
உள்ளன்பு காட்டிடுவார்
உயிரையே கலைதிடுவார்
கனிவாய் அனைத்திடுவார்
கல் எறிந்து அழித்திடுவார்
மாலையை தொடுத்திடுவார்
மலர் வளையம் ஆக்கிடுவார்
வலிய வந்து சேர்ந்திடுவார்
வளர்ந்த பின்பு சேறிடுவார்
இதமாக நட்பிடுவார்
இதயத்தை நசுக்கிடுவார்
வாழ்க என சொல்லிடுவார்
வந்த வழி மாறிடுவார்
பண்போடு இருந்திடுவார்
பணத்தோடு இணைந்திடுவார்
நம்மோடு இருந்திடுவார்
நல்முறையில் மருந்திடுவார்
விலகிடவும் முடியாது
விலகியும் போகாது - நம்மை
வீழ்த்தாமல் சாகாது .........

எழுதியவர் : கொங்கு தும்பி (3-Dec-13, 10:53 pm)
பார்வை : 78

மேலே