நான்…
வானில் பறந்து செல்லும்
பறவையாய் நான் இருந்தால் உயரப்
பறந்து சென்று நிலவின் மடியில்
தலை வைத்து இருப்பேன்!
உன் மனதில் உதிக்கும் கனவானால்
நான் உன் எண்ணமெல்லாம் நீக்கமற
எங்கும் நிறைந்திருப்பேன் - நீ
நினைத்ததைச் செய்து முடிப்பேன்!
உன் கண்களில் வடியும்
கண்ணீராய் நான் இருந்தால் உன்
இதழில் வடிந்து உன் நெஞ்சினில்
நான் குடியிருப்பேன்!
மலராய் நான் பிறந்து விட்டால்
ஒரு யுத்த பூமியில் வளரவே ஆசை;
குருதியே என் உடலுக்கு நீராய்,
வீரனாய் நான் போர்க்களத்தில் சாவேன்!