கருஞ்சிகப்பு உதிரம்

கருஞ்சிகப்பு உதிரம்

கரைகளில் வழிந்திறங்கிய
கருஞ்சிகப்பு வண்ணம்
அலைக் குழந்தைகளின்
விரல் நுனிகளில் மருதாணி பூச
கொதித்து எழுகிறாள் கடலன்னை.
குழந்தைகளின் விரல்களைக் கழுவ
கடல் நீரும் சென்னிறமாகிறது.
பின் ஒவ்வொரு நாளும்
தாடையில், நெற்றிப்பட்டையில்
பாதங்களில், மார்புகளில்
கறைகளை தீற்றிக்கொண்டு
அழுதபடி வரும் குழந்தைகளை
அழைத்துக்கொண்டு
நிரந்தரமாக வேளியேற
கரையில் ஒதுங்கும்
நீல நிற மீன் களின்
கரு விழியில் இருந்து கசிகிறது
கருஞ்சிகப்பு உதிரம்.

எழுதியவர் : பிரேம பிரபா (3-Dec-13, 8:23 pm)
பார்வை : 72

மேலே