பாவம் தட்டான்
சுதந்திரமாய் சுற்றி திரியும்
தட்டானை பிடித்து
இறக்கை ஒடித்து
சுடும் பாறையில் இட்டு
உங்கம்மா எப்படி செத்தா ?
உங்கய்யா எப்படி செத்தான் ?
என்ற கேள்விக்கு
தட்டான் இறக்கை இன்றி
உருண்டதும் புரண்டதும்
பதிலாக கொண்டு
நீயும் செத்து போ என
தலையேய் கிள்ளி எறிந்ததை
நினைத்து வருத்தபடுகிறேன்
என் மகள்
உங்கம்மா எப்படி செத்தாங்க
என்ற போது.
பாவம் தட்டான் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
