+கறிக்கடை கோழிகள்+

வாரம் முழுதும்
தானியங்கள் கணக்கின்றி கிடைக்கும்
மகிழ்ச்சியால்
தின்று தின்று
கொழுத்துப்போயிருக்கும்
ஞாயிரன்று உயிர் போகப்போவது தெரியாத‌
கறிக்கடை கோழிகள்!

அது போல‌
சில விஷயங்கள்
அளவுக்கதிகமாக கிடைக்கும்போது
சிறிது மட்டும் யோசித்தோமானால்
கோழியைப்போல காலியாகாமல்
தப்பிக்க வழியுண்டு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Dec-13, 6:33 pm)
பார்வை : 108

மேலே