பிள்ளையிடம் தாயின் விண்ணப்பம்

அன்பாய் வலிதாங்கி
அனுதினமும் சுமந்தாய் !
அடி வயிறு நொந்தாலும்
அழகுடன் ஈன்றாய் !
பகலும் இரவும் தெரியாமல்
பசி தூக்கம் காணாமல்
பாலூட்டி வளர்த்தாய் !
உலக பெயர்களை தேடி தேடி
உறவுகளை நாடி நாடி
இன்பமுடன் பெயர் இட்டாய் !
இதழ்களில் முத்தமிட்டு
இதமாய் தாலாட்டி
இடையிலும் தோளிலும்
இளைப்பாறாமல் தாங்கி
உயிராய் வளர்த்தாய் !
புட்டியில் பால் தந்தே
கெட்டியின்றி வளர்க்கும்
மாதாக்கள் மத்தியிலே
மார்புபால் தந்து
மானமுடன் அன்பு தந்து
மரபு சொல்லி வளர்த்தாய் !
முகவரியை தந்தும்
மூதாதையர் வழிகாத்தும்
முழுமையாய் வாழ்ந்தாய் !
அதற்கு பரிசு தான் - உன் பிள்ளை தருகின்றார்
முதியோர் இல்லம் எனும்
மூப்பில்லா நரகம்
எதையும் தாங்கிடுவேன்
இன்னும் உன்னை சுமந்திடுவேன் - என்
வயிற்றில் பிறந்தவனே - நான்
வயிற்று சோறுக்கா
வாழ்கிறேன் சொல் கண்ணே
வயோதிகம் எனக்கு
வரண்டு விட்ட பாதை எனக்கு
வழி தெரியவில்லை
வழியில் ஒளி தெரியவில்லை
மரமும் கயிறும் மனமுவந்து தந்தால்
மறுநாளே உனக்கு
மலிப்பார்கள் தலையை
அதற்கு நீ ஏற்பாடு செய்
சுமந்தவள் சொல்கின்றேன்
சுகமாக நீ வாழ - நான்
சுடுகாடு செல்ல உதவுவாயா !