பணம்

இறகின்றி இடம் மாறி பறக்கும்
இனிய தாள் !
இருப்போரை ஆட்டி வைக்கும்
இறப்பில்லா காகிதம் !
இரவு பகல் ஓய்வின்றி
இதயம் தேடும் கட்டு !
இருப்பிட முகவரியும்
இனி வரும் முகவரியும்
இரண்டும் இல்லாத ஆயுதம் !
இருக்கும் இடத்தை செழிப்பாக்கி
இமயம் போல் உயர்வுதரும்
இறைவன் கருவி !
ஏற்றம் மாற்றம்
பதவி பவுசு - என
பாய்ந்து வரும் அனைத்தும்
ஓய்வின்றி வழங்கும்
உலக நாயகன்.

எழுதியவர் : கொங்கு தும்பி (4-Dec-13, 11:11 am)
Tanglish : panam
பார்வை : 159

மேலே