கோடி கோடி
விண்ணில் தவழும் விண்மீன் கோடி!
கடலில் நீந்தும் வண்ணமீன் கோடி!
எண்ணில் உள்ளது எண்ணிகை கோடி!
நன்னாளில் பொலிவாய் உடுப்பது கோடி!
பணம் கொண்டோர் சேர்ப்பது கோடி!
பொருள் இல்லார் அமர்வது கோடி!
மனதில் கொள்ளும் கற்பனை கோடி!
இயற்கை அழகில் காண்பது கோடி!
கோபுரம் தரிசனம் காண்பது கோடி!
கோடியாய் வாழ்வோம் இன்பம் கோடி!