கறுப்பின மக்களின் காவலன்

விடுதலை நாதம் ஓய்ந்தது - கை
விலங்கின் விழிகள் அழுகுது
இமய இதயம் சாய்ந்தது
இறைவன் பாதம் சேர்ந்தது
உறுதியின் லட்சியம் மறைந்தது
உரிமை குரல் கலைந்தது
கொள்கைக் குன்று உடைந்தது
கொட்டிய முரசு முடிந்தது
கருப்பு வைரம் புதைந்தது
கருத்து பெட்டகம் தொலைந்தது
உலகின் உள்ளம் பதறுது
உன்னை நினைத்து கதறுது.

எழுதியவர் : கொங்கு தும்பி (6-Dec-13, 9:31 pm)
பார்வை : 109

மேலே